Description
இஸ்லாத்தின் நன்மைகள்
நடைமுறைக்குரிய நீதமான வாழ்க்கை நெறி
அல்லாஹ்வுடனான நெருக்கமும் நேரடித் தொடர்பும்
தூய்மையான மற்றும் தெளிவான இறைக்கொள்கை
எக்காலமும் பொருந்தும் உலகப் பொதுமறை
அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும்
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்பது ஒரிறைவனாகிய அல்லாஹ்வை (அரபியில் "அல்லாஹ்") நம்பிக்கைகொண்டு, அவனை மட்டும் வணங்குவதாகும். மேலும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனின் இறுதித் தூதராக என்றும் நம்பிக்கை கொள்வதாகும்.
உலக மக்கள் தொகையில் சுமார் 4 பேரில் ஒருவராக 23% பேர் முஸ்லிம்களாக இருக்கின்றனர், அதாவது 1.5 பில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உள்ளனர்.
இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்றனர், அவர்கள் எந்த இன அல்லது தேசிய அடையாளத்தையும் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.
நம்பிக்கை மற்றும் அணுகுமுறை
அல்லாஹ் தன்னைப் பற்றி அறியவும் உணரவும் தனது அடையாளங்களை நமக்கு அறிவித்துள்ளான். அவனை உணர்வது நமக்கு கடமையாகும். இது நமது வாழ்க்கையின் ஒரு முக்கிய சோதனையாகும். ஒருவருக்கு சரியாக சிந்திக்கும் திறன் இல்லாவிட்டால், எவ்வளவு தகவல் கொடுத்தாலும் அவர் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள முடியாது.
பரந்த மனப்பான்மையும் திறந்த மனதும்
பணிவும் நேர்மையும்
நமது படைப்பு/வாழ்வின் நோக்கம் பற்றி சிந்தித்தல்
இறைவனின் அத்தாட்சிகளை ஏற்றுக்கொள்ளுதல்
உண்மையை விளக்கிக் கூறினாலும் பிடிவாதத்தால் சத்தியத்தை ஏற்க மறுப்பது
பெருமை & ஆணவம்
உலக மோகம் கொண்டு அதில் மட்டுமே கவனம் செலுத்துவது
எல்லாவற்றையும் அர்த்தமற்றது என்று நிராகரித்தல்
காரணம் 1
பிரபஞ்சத்தின் ஆரம்பம்
இறைவனை நம்புவதற்கான முதல் காரணம்: பூமியின் படைப்பை பற்றிய சிந்தனையுடன் தொடர்புபடுத்த வேண்டும்.
பிரபஞ்சம் உருவானது எப்படி?
உலகம் ஒன்றுமில்லாததிலிருந்து வந்ததா? ஒன்றுமில்லாமல், எதுவும் உருவாகுவதில்லை.
அல்லது பூமி தன்னைத்தானே உருவாக்கி கொண்டதா? இல்லை, ஒரு தாய் தன்னைத் தானே பெற்றெடுத்தாள் என்று கூறுவது போலாகும் (அவ்வாறு கூறுவது பகுத்தறிவற்றது)
அல்லது பூமியின் படைப்புக்கு ஆரம்பம் இல்லாமல் இருந்ததா? அதுவும் இல்லை, நவீன அறிவியல் பிரபஞ்சம் நித்தியமானது (நிரந்தரமானது) அல்ல என்றும் அதற்கு ஒரு ஆரம்பம் இருந்தது என்றும் முடிவு செய்கிறது.
அல்லது பூமி படைக்கப்பட்ட ஒரு பொருளா ? ஆம். பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று அதை உருவாக்கியது என்று முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்கிறார்கள் - அவனே படைப்பாளனான அல்லாஹ்வாகும்
ஆனால் கடவுளை யார் படைத்தது?
அல்லாஹ் படைக்கப்படவில்லை. உலகமும் பிற படைப்பினங்களும் படைக்கப்பட்டவை என்றாலும், அல்லாஹ் நித்தியமானவன். ஆரம்பமும் முடிவுமின்றி என்றென்றும் இருந்து கொண்டே இருப்பவன்.
காரணம் 2
பிரபஞ்சத்தின் ஒழுங்கு
இறைவனை நம்புவதற்கான மற்றொரு எளிய காரணம், பின்வரும் கருத்துக்களைக் கொண்டு பிரபஞ்சத்தின் ஒழுங்கைப் பற்றி சிந்தித்தல்:
1. எந்த ஒரு படைப்பிலும் ஒழுங்கான கட்டமைப்பு காணப்பட்டால், மிகப்பெரும் அறிவாற்றல் உள்ளவர் அதை வடிவமைத்துள்ளார் என்பதை அது குறிக்கிறது.
2. நமது சூரிய குடும்பம் நுட்பமான அமைப்புகள், மற்றும் அதற்கேற்ற வடிவங்களுடன் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
3. உலகில் காணப்படும் அனைத்து படைப்பினங்களின் ஒழுங்கமைப்பு அதனை உருவாக்கிய படைப்பாளனின் பெரும் அறிவு ஞானத்தை காட்டுகிறது!
பிரபஞ்சத்தின் பல அம்சங்கள், படைப்பினங்கள் உயிர் வாழ்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. இந்த அளவீடுகள் சற்று வித்தியாசமாக இருந்தால், உயிர்கள் இருக்க முடியாது. அதற்கான எடுத்துக்காட்டுகள் கீழ்வருமாறு.
ஓசோன் லேயர்
பூமியின் மேலோட்டத்தின் தடிமன் இருப்பது
காற்றில் ஆக்ஸிஜன் % சதவிகிதமாக இருப்பது
சூரியனிலிருந்து பூமி தூரமாக இருப்பது
சூரியன், பூமி மற்றும் சந்திரன் இவைகளுக்கு மத்தியில் ஒப்பீட்டளவில் சிறிது மாற்றத்துடன் சரியாக அமைந்திருப்பது.
அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய இந்த உலகம் யாருடைய கண்காணிப்புமின்றி தற்செயலாக உருவாகி இருக்க முடியுமா?
இது சிந்திக்க வேண்டிய முக்கியமான கேள்வியாகும். இஸ்லாம் அறிவியல் ஆராய்ச்சி சிந்தனையை ஊக்குவிக்கிறது.
அறிவியல் உலகில் காணப்படும் விதிகள் மற்றும் ஒழுங்குகளை விளக்குகிறது. இவை அனைத்தும் படைப்பாளனின் பேராற்றல் மற்றும் ஞானத்தை உணர உதவுகிறது. நவீன அறிவியல் இந்த படைப்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன! என்பதை மட்டுமே காட்டும், ஆனால் அந்த படைப்புகள் யாரால் உருவாக்கப்பட்டன? என்பதை புரிந்துகொள்ள, நாம் சரியான இறைக்கொள்கைகளின் மூலமே அறிந்து கொள்ள வேண்டும்.
காரணம் 3
குர்ஆன் – இறைவேதம்
குர்ஆன், இறைவன் இருக்கிறான் என்பதை உறுதியாக நிரூபிக்கும் வலுவான ஆதாரமாகும். அது தனது தனித்துவமான நடை, ஞானம், வழிகாட்டுதல், சொற்பொழிவின் அழகு மற்றும் (குர்ஆனை வாசிக்கும்) வாசகர்களை அணுகும் முறை, போன்றவற்றால் எந்தப் புத்தகத்துடனும் ஒப்பிட முடியாத ஒரு வேதமாகும்.
அதில் எவ்வித பிழைகளும் முரண்பாடுகளும் இல்லை.
இறைவனின் உள்ளமை, பண்புகள் ஆகிய அனைத்தைப் பற்றியும் தூய தெளிவான விளக்கங்களும் அதில் இடம்பெற்றிருக்கும்.
அரபு மொழியின் அழகும் அதன் ஆழமான புலமையும் உள்ளடக்கியிருக்கும் .
(இந்த குர்ஆன்) எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியின் மூலம் அருளப்பட்டதாகும்.
1400 ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மனித படைப்பின் பண்புகள் குறித்த ஆழமான நுண்ணறிவை குர்ஆன் விளக்குகிறது.
மேலும் பல மில்லியன் மக்களால் மனப்பாடம் செய்யப்படுகிறது
1400 ஆண்டுக்கு முன் அறியப்படாத அறிவியல் உண்மைகளை குர்ஆன் தன்னகத்தே கொண்டுள்ளது.
உறுதி(யாக நம்பிக்கை) கொண்டவர்களுக்குப் பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களுக்குள்ளேயும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன; அவற்றை நீங்கள் உற்றுநோக்க வேண்டாமா? 51:20-21
வணக்கத்திற்குரிய இறைவன் யார்?
இஸ்லாமின் மிக முக்கியமான அம்சமாக இறைவனின் முழு பரிபூரணத்தையும், கண்ணியத்தையும், தனித்துவத்தையும் எவ்விதத்திலும் சமரசமின்றி ஏற்றுக்கொள்வதாகும்.
· இறைவன் ஒருவனே! & அவன் தனித்தவன் ஈடு இணையில்லாதவன், பெற்றோர்களோ! மகன்களோ! அவனுக்கு இல்லை.
· வணங்குவதற்கு தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை - அடியார்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தன்னை வணங்குவதற்கு அவன் எந்த இடைத்தரகர்களையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
· இறைவன் பரிபூரணமான பண்புகள் கொண்டவன் & குறைபாடற்றவன் - அவனுக்கென்று எந்த வரம்புகளோ அல்லது பலவீனங்களோ இல்லாதவன்.
· இறைவன் மிகவும் இரக்கமுள்ளவன் - நாம் பாவங்களைச் செய்ய கூடியவர்கள் என்பதை அவன் அறிவான் , இருப்பினும் அவனிடத்தில் நமது தவறுகளை எப்போதும் ஒப்புக்கொள்வதும், நேர்மையாக மன்னிப்பு கேட்பதும் அவசியம்.
· இறைவனின் பிரத்தியேக பண்புகள் எதுவும் அவனுடைய படைப்புகள் பெற்றிருக்க மாட்டார்கள்.
இஸ்லாத்தின் கடவுள் கொள்கையை புரிந்து கொள்ள முயலும் போது, இயேசு என்கின்ற ஈசாவின் தன்மையைப் பற்றிய பரவலான குழப்பங்ளைக் கவனத்தில் கொண்டு அவருடைய நிலையைப் பற்றி விவாதிப்பது அவசியமாகும்.
இஸ்லாம் ஈசாவை கண்ணியமான இறைத்தூதர் என கூறுகிறது, முஸ்லிம்கள் அவரை கடவுளாக வணங்குவதில்லை – ஏனென்றால், ஈசாவையும் மற்ற அனைத்தையும் படைத்த இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். என வலியுறுத்துகிறது. எனவே, ஈசாவை கடவுள் என்றோ! அல்லது கடவுளின் மகன் என்றோ! அல்லது முக்கடவுள்களில் ஒருவர் என்றோ! நம்பிக்கை கொள்வதை இஸ்லாத்தில் தூய்மையான இறைக்கொள்கைக்கு தெளிவாக முரண்படுகிறது.
கிறிஸ்தவ போதனைகளில் ஏசு, தனி மனிதனாகவும் கடவுள் தன்மையற்றவராகவும் இருக்கின்றார் என்பதைக் காட்டும் பல உதாரணங்கள் உள்ளன. உதாரணமாக, ஏசு தன்னை படைத்த இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கிறார்.
இயேசு கடவுளாக இருந்தால் எப்படி பிரார்த்தனை செய்வார்?
இயேசு பிறந்தார், சாப்பிட்டார், தூங்கினார் மற்றும் வரையறுக்கப்பட்ட அறிவைக் கொண்டிருந்தார் - இந்த பண்புகள் கடவுளுக்கு பொருந்தாது. கடவுளுக்கு பரிபூரண குணங்கள் உள்ளன, ஆனால் மனிதன் அதற்கு நேர்மாறாக இருக்கிறான்.
எவ்வாறு ஒரே நேரத்தில் கடவுள் பரிபூரணமாகவும் குறைவுள்ளவனாகவும் இருக்க முடியும்?
பைபிளின் ஆரம்பகால மொழிகளில் "கடவுளின் மகன்" என்ற சொல், ஏசுவுக்கு மட்டும் இல்லாமல், அனைத்து நல்ல மனிதர்களுக்கும் குறியீடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இறைவனுக்கு மகன் இருப்பது என்பது தவறான அவதூறான கருத்தாகும்.
"கடவுளின் மகன்" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
கடவுளால் எதையும் செய்ய முடியும் என்றால், அவன் ஏன் மனிதனாகவோ அல்லது ஒருவருக்கு மகனாகவோ முடியாது?
A. இறைவன் என்பவன் எப்போதும் தனது முழுமையான பண்புகளை பேணுக்கூடியவன், அந்த பண்புகளை பாதிக்கும் எந்த செயலையும் அவன் செய்வதில்லை. அவன் ஒருபோதும் படைப்புகளின் பலவீனமான செயல்களைச் செய்வதில்லை, ஒரு வேளை (மனிதனின் கற்பனைக்கேற்ப) இறைவன் தன்னை மனிதனாக மாற்றிக் கொண்டால், மனிதனின் தன்மைகளை ஏற்றுக் கொண்டால், அவர் படைப்பினங்களை காக்கும் இறைவனாக இருக்கமாட்டார்.
மக்கள் நேர்வழி பெற வேண்டி பல நபிமார்கள் (இறைத்தூதர்கள்) ஏக இறைவனால் அனுப்பப்பட்டனர்.
ஆதம் நபி (ஆதாம்)
நூஹ் நபி (நோவா)
இப்ராஹீம் நபி (ஆபிரஹாம்)
மூஸா நபி (மோசஸ்)
ஈஸா நபி (இயேசு)
முஹம்மது நபி மற்றும் (முன் சென்ற) பல இறைத்தூதர்கள்
(அவர்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டும்).
(அனைத்து இறைத்தூதர்களும்) ஒரே கொள்கையை தான் மக்களுக்கு போதித்தனர்.
ஓரிறைக்கொள்கைப் பற்றிய கருத்தை வலியுறுத்துதல்.
பொய்யான கடவுள்களையும் நம்பிக்கைகளையும் நிராகரித்தல்.
இறைவனை வழிபடும் முறைகளை மக்களுக்கு கற்றுக்கொடுத்தல்.
நல்ல முன் மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டுதல்.
இறைக்கட்டளைக்கு கீழ்படிந்தால் அதற்குரிய நன்மைகளைப் பற்றி மக்களுக்கு ஆர்வமூட்டுதல்.
இறைக்கட்டளைகளை மீறினால் அதற்குரிய தண்டனையைப் பற்றி மீறுபவர்களுக்கு எச்சரிக்கை செய்தல்.
இறைவன் ஒவ்வொரு சமூகத்திற்கும் (ஒரே இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற) முக்கியமான செய்தியுடன் இறைத்தூதர்களை அனுப்பினான். முஸ்லிம்கள் அனைத்து இறைத்தூதர்களையும் நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள் என்றாலும், அவர்கள் (மனிதர்களாகிய) இறைத்தூதர்களை ஒரு போதும் வணங்குவதில்லை அல்லது அவர்களுக்கு இறைத்தன்மையை கற்பிப்பதில்லை, ஏனெனில் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. என்ற கோட்பாட்டை முஸ்லிம்கள் கடைபிடிப்பதால்.
மனித வாழ்க்கையின் நோக்கம்.
அளவிலா ஞானத்தின் அதிபதியான இறைவன், நம்மை இலக்கின்றி, வெறும் உணர்ச்சிகள் மற்றும் அடிப்படை ஆசைகளை பூர்த்தி செய்வதற்காக படைக்கவில்லை. மாறாக, படைப்பாளனின் வழிகாட்டுதலின்படி நாம் வாழ்வதாகும் அவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழ்வதே நமக்கான உயர்ந்த நோக்கமாகும். இந்த வழிகாட்டுதல் அனைத்து அம்சங்களிலும் மன நிம்மதியையும் வெற்றிகரமான வாழ்க்கையையும் அடைய உதவுகிறது. அவன் நம்மை படைத்தது, படைப்புகள் தன்னை அறிந்து கொள்ளவும், சரியான நெறிமுறையின் படி நம் வாழ்க்கையை அனுபவிக்கவும், நம் சொந்த விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளவும் நம்மை மனிதனாக படைத்துள்ளான்.
இஸ்லாம் ஒரு முழுமையான நடைமுறைக்கேற்ற ஒரு வாழ்க்கை நெறியாகும், இது முஸ்லிம்களை சீரான, கண்ணியமான, சமூகத்திற்கு பயனளிப்பவர்களாக இருக்க கற்றுக்கொடுக்கிறது. இஸ்லாத்தில் வழிபாடு என்பது இறைவனிடம் பிரார்த்தனை (துஆ) செய்வது மட்டுமல்ல. அவன் பொருத்தத்தை பெறுவதற்காக செய்யப்படும் இறைவன் பிரியப்படுகின்ற அனைத்தையும் செய்வது வணக்கமாகவே கருதப்படும்.
பின்வரும் உதாரணத்தை போன்று:
• நேர்மையான முறையில் வாழ்வாதாரம் தேடுதல்
• அடக்குமுறையை எதிர்த்தல்
• அனாதைகளைப் பராமரித்தல்
• சுற்றுச்சூழலைக் பாதுகாத்தல்
• பொறுமை & பணிவாக இருத்தல்
• சமூகத்திற்கு நன்மை செய்தல்
• பெற்றோரை மதித்தல்
• நீதியின் பக்கம் நிற்பது
• அண்டை வீட்டாரிடம் இணக்கமாக இருப்பது
• இறைவனை எப்போதும் நினைவு கூர்தல்
• ஏழை எளியவரின் குடும்பத்தை பராமரித்தல்
• உண்மையைப் பேசுதல்
வணக்க வழிபாடுகள் செய்வதற்கு, முதலில் இறை திருப்திக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இருக்க வேண்டும். மேலும், அந்த வழிபாடுகள் இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் படி சரியாக செய்யப்பட வேண்டும். இது மட்டுமே நமது வணக்கத்தை அர்த்தமுள்ளதாக்கும்
இவைகளை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது...
பெண்கள்: இஸ்லாத்தில் பெண்களுக்கு உயர்ந்த மரியாதை உண்டு. அவர்கள் அன்பு, மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அவர்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், அவர்களுக்கு எதிராக எந்தவிதமான அவதூறும் அடக்குமுறையும் எப்போதும் ஏற்க முடியாது. இஸ்லாம் பெண்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வழிமுறைகளை வழங்கியுள்ளது.
பயங்கரவாதம்: சமூகத்தின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்காகவும், அடக்குமுறை பரவுவதைத் தடுக்கவும், நீதியை நிலைநாட்டவும் இஸ்லாம் எதிர்த்துப் போரிட அனுமதிக்கிறது. இருப்பினும், போராளிகள் அல்லாத அப்பாவிகளை குறிவைப்பது இழிவான செயலாகும், இது தடைசெய்யப்பட்டுள்ளது.
ஹலால் உணவுகள்: ஹலால் உணவுகள் என்பது அல்லாஹ் அல்-குர்ஆனில் சட்டப்பூர்வமாக அனுமதித்த உணவுகளாகும். குறிப்பாக மாமிசம் மற்றும் கோழி போன்ற இறைச்சிகளை மனிதாபிமானத்துடன் விலங்கினங்களுக்கு துன்பங்கள் குறைக்கப்பட்ட நிலையில் அல்லாஹ்வின் பெயரைக் குறிப்பிட்டு அறுக்கப்படுவதாகும்.
பரிணாம வளர்ச்சி: இறைவன் முதல் மனிதரான ஆதமை அவரது இறுதி வடிவில் படைத்தான் - குரங்குகளில் இருந்து மனிதன் பரிணமித்தான் என்பது தவறானது, (நிரூபணமில்லாதது) இதை அறிவியலால் நேரடியாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது, மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களின் உருவாக்கம் குறித்து இஸ்லாமிய குறிப்புகளில் எதுவும் இல்லை.
மேலும் இறைவன், தான் விரும்பும் விதத்தில் அனைத்து உயிரினங்களையும் படைத்ததாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.
வாழ்க்கையைப் பற்றிய ஒரு முஸ்லிமின் பார்வை
எனக்கு ஒரு உன்னத நோக்கம் உள்ளது
இறைவனின் கருணையில் மற்றும் அவனது தண்டனை பற்றிய பயம் சம்பந்தமான நம்பிக்கையில் சமநிலையுடன் இருத்தல்.
நல்லது நடந்தால், இறைவனுக்கு நன்றியுடனும். கெட்டது நடந்தால், பொறுமையாகவும் இருக்க வேண்டும்.
இறைவனின் மீது முழு ஆதரவு வைக்க வேண்டும் - அவனின் அனுமதியின்றி எதுவுமே நடக்காது. என்ற உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும்.
இந்த வாழ்க்கை ஒரு சோதனை, நான் செய்யும் அனைத்தையும் இறைவன் கணக்கிடுகின்றான். என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
என்னிடம் உள்ள அனைத்தும் அவனிடமிருந்து வந்ததே!
என் கட்டுப்பாட்டில் உள்ளவற்றில் கவனம் செலுத்தி, என்னால் முடிந்தவரை இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ முயற்சி செய்வேன்.
முஸ்லிமல்லாதவர்களும் சரியாக வழிநடத்தப்பட வேண்டும் என்ற உண்மையான அக்கறை கொள்ள வேண்டும்.
நிச்சியமாக நான் அவனிடம் திரும்புவேன், இவ்வுலகில் செய்த ஓவ்வொன்றுக்கும் நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். என்ற சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
