தொழுகையின் முக்கியத்துவம்

7.62 MB 40 1 Files
albyan
or download free
[free_download_btn]

Description

மார்க்க அறியாமையால், பல முஸ்லிம்கள் தொழுகை முக்கியமானது என்பதை உணரவில்லை. அதை ஒழுங்காகப் பேணுவதில்லை, தொழுகையின் அடிப்படை விதிகளை கூட சரியாக கடைப்பிடிக்கவில்லை, ஆனால் தொழுகையின் நோக்கம் என்னவெனில் இறைவனுடன் உங்கள் உறவை வலுப்படுத்துவதாகும், அவன் அருளியிருக்கும் அனைத்து அருட்கொடைகளுக்கும் நன்றி கூறுவதாகும், மற்றும் அவனது மகத்துவத்தை நினைவுபடுத்துவதாகும். உடலுக்கு உணவு, தண்ணீர் போன்ற தேவைகள் இருப்பது போல், ஆன்மாவுக்கு வழிபாடு தான், உள்ளத்திற்கு உணவாகும், இதில் மிக முக்கியமானது தொழுகை. அந்த தொழுகை சரியாக கடைபிடிக்காவிட்டால் உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் அவரது உள்ளம் உயிரற்றதாக இருக்கும், அவரிடம் தொழுகை சரியாக அமைந்து விட்டால் அவரது உடலும் உள்ளமும் பிரகாசமானதாக ஆகிவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வை நினைவு கூறுபவன் உயிருள்ளவனாகவும், நினைவு கூறாதவன் உயிரற்றவனாகவும் ஒப்பிடுவது போன்றதாகும்.

அல்லாஹ் கூறுகிறான்,

"நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் - உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்தின்பால் உங்களை அவர் அழைத்தால் - நீங்கள் பதிலளியுங்கள்; 8:24

அதன் முக்கியத்துவம்

அல்லாஹ்வுடன் நேரடி தொடர்பு

"ஒருவர் தனது இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர், அவர் (சிரம் தாழ்த்தி) ஸஜ்தாவில் இருக்கும் போதுதான்."

தொழுகை உங்களை அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ள வைக்கிறது. தொழுகைக்கான அரபு வார்த்தை (அஸ்-ஸலாஹ்) உண்மையில் "இணைப்பு" என்று பொருள்படும் அரபு வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் எவரேனும் தொழுகைக்காக நிற்கும் போது, ​​அவர் தனது இறைவனுடன் தொடர்பு கொள்கிறார், எனவே அவர் அவனிடம் பேசுகிறார் என்பதைக் கவனிக்கட்டும்." உங்கள் படைப்பாளன் உடனான இந்த உறவைத் துண்டிக்காதீர்கள்.

இஸ்லாத்தின் ஒரு தூண்

தொழுகை என்பது இஸ்லாத்தின் இரண்டாவது மிக முக்கியமான தூணாகும், மேலும் இது ஒரு முஸ்லிமின் வாழ்வில் மிகவும் வழமையான கட்டாயச் செயலாகும். தொழுகை என்பது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தினமும் நிறைவேற்ற வேண்டிய ஒரு செயலாகும். போரின் போது கூட தொழுவதிலிருந்து முஸ்லிம்களுக்கு அல்லாஹ் விலக்களிக்கவில்லை! அவன் கூறுகின்றான்:

(ஐங்காலத்) தொழுகைகளையும் (குறிப்பாக அஸர் தொழுகையாகிய நடுத் தொழுகையையும் (விடாமல் தொழுது) பேணிக் கொள்ளுங்கள். மேலும், (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பயந்து பணிந்தவர்களாக நில்லுங்கள். ஆனால், (எதிரிகளின் தாக்குதலினால் அமைதியாக தொழுகையை நிறைவேற்ற முடியாதென்பதை) நீங்கள் பயந்தால், அப்பொழுது நடந்தவர்களாக அல்லது (வாகனத்தின்மீது) சவாரி செய்தவர்களாக (த்தொழுது கொள்ளுங்கள்.) பின்னர், நீங்கள் அச்சமற்றவர்களாக ஆகி விட்டால், நீங்கள் அறியாமலிருந்தவற்றை அவன் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த பிரகாரம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். 2:238-239

போரின் போதே! (தொழுகைக்கு) இந்தளவுக்கு முக்கியமென்றால், (போரல்லாத நேரத்தில்) அமைதியின் போது (அதற்கான முக்கியத்துவம் என்ன? (என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.)

வெற்றி என்பது தொழுகையில் உள்ளது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு மனிதன் மறுமை நாளில் கணக்குக் கேட்கப்படும் அவனது செயல்களில் முதன்மையானது தொழுகையாகும். அது சரியானதாகக் கண்டறியப்பட்டால், அவர் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் இருப்பார். ஆனால் அது குறைபாடு உடையதாக இருந்தால், அவர் நஷ்டவாளியாக தோல்வியுற்றவராக இருப்பார்.

அதன் நன்மைகள்

தீமைக்கு எதிரான கேடயங்கள்

அல்லாஹ்வின் உதவியை நாடாமல், தீமையிலிருந்து விலகி இருக்க சாத்தியமே இல்லை.

அல்லாஹ் கூறுகிறான்,

(நபியே!) நிச்சயமாக தொழுகை, (அதை நிறைவேற்றுபவரை) மானக்கேடான செயலிலிருந்தும், தீமையையும் விட்டு ம் தடுக்கும்…. 29:45

நீங்கள் ஒரு நாளுக்கு 5 முறை அல்லாஹ்வின் முன் மனமுவந்து நின்றால் பாவங்கள் எப்படி நடக்கும்?

உங்கள் ஆன்மாவை வளப்படுத்துகள்

தொழுகை உங்கள் படைப்பாளனுடன் தொடர்பு கொண்டு உங்கள் ஆன்மீக தேவையை பூர்த்தி செய்கிறது. குறிப்பாக பரபரப்பான வாழ்க்கையில் உங்கள் ஆன்மாவுக்கு அமைதியையும் மனநிறைவையும் தருகிறது,

அல்லாஹ் கூறுகிறான்,

இன்னும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால்! அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன… 13:28

உங்களை பணிவுள்ளவர்களாக ஆக்குகிறது

அல்லாஹ்வின் மகத்துவத்தையும், அவன் மீது நீங்கள் சார்ந்திருப்பதையும் உணர்ந்து கொள்வதன் மூலம் பெருமையும் ஆணவமும் நீங்கும். தொழுகையில், முஸ்லிம் தனது உடலின் சில பகுதிகளை கொண்டு, தலையை தரையில் வைத்து, "என் இறைவன், மிக உயர்ந்தவன், சிறந்தவன்" என்று கூறுகிறார்.

அல்லாஹ் கூறுகிறான்,

நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாகவெற்றியடைந்து விட்டனர். அவர்கள் யாரென்றால், தம் தொழுகையில் மிக்க உள்ளச்சம் உடையவர்கள். 23:1-2

நிச்சயமாக, நீங்கள் (குர் ஆன்) ஓதுவதைப் புரிந்துகொண்டு பணிவுடன் கவனம் செலுத்தும்போது மட்டுமே இதை அடைய முடியும்.

பாவங்களைக் கழுவுகிறது

எல்லோரும் பாவங்களைச் செய்கிறார்கள், இருப்பினும், அந்த பாவங்களை போக்க அல்லாஹ் தொழுகை மூலம் ஒரு வழியை வழங்கியுள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்

நிச்சயமாக, தொழுகையை நிறைவேற்றுவீராக! நற்செயல்கள் தீய செயல்களைப் போக்கிவிடும்.. 11.114.

தூதர் (ஸல்) தனது தோழர்களிடம் (தொழுகையைக் குறித்து) ஒரு அழகான உதாரணத்தைக் கூறினார்கள், “உங்களில் ஒருவர் தனது வீட்டு வாசலில் ஒரு நதி இருந்து, அதில் அவர் ஒரு நாளைக்கு ஐந்து முறை குளித்தால். அவர் மீது ஏதேனும் அசுத்தம் இருக்குமா?" எனக்கேட்டபோது, அதற்கவர்கள், “இல்லை” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறே, ஐந்து நேரத் தொழுகையைக் கொண்டு அல்லாஹ் பாவங்களைத் துடைக்கிறான்” என்று பதிலளித்தார்கள்.

உங்கள் பிரச்சனைகளை தீர்க்கிறது

நீங்கள் அல்லாஹ்வுடனான உறவை வலுப்படுத்தினால், மற்ற படைப்புகளுடன் உங்கள் உறவை அல்லாஹ் பலப்படுத்துவான். தொழுகையின் மூலம், சர்வ வல்லமையுள்ள அவன், உங்கள் எல்லா பிரச்சனைகளையும் சரிசெய்வான்.

அல்லாஹ் கூறுகிறான்

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். 2:153

முஸ்லிம்களை ஒற்றுமைபடுத்துகிறது

முஸ்லிம்கள் கூட்டாக தொழுகை நடத்துவது (ஜமாஅத்து தொழுகை) தங்களுக்குள் சகோதரத்துவத்தை, சமத்துவத்தை மற்றும் பணிவையும் உண்டாக்குகிறது. தொழுகையாளிகள் ஒரே வரிசையில், ஒன்றாக, தோளுக்கு தோள் நெருக்கமாக நிற்கிறார்கள். இங்கு இனம், தேசம், நிறம், செல்வம், குடும்பம் அல்லது பதவி போன்ற எந்த வித்தியாசத்திற்கும் இடமில்லை. இந்த ஒற்றுமையை வெளிப்படுத்தும் (தொழுகை எனும்) செயல், மனிதர்களுக்கு இடையிலான எல்லா தடைகளையும் தகர்த்து விடுகிறது.

தொழுகையை கைவிடுதல்

.மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது?. 82:6

உங்களை படைத்தைவனுக்கு கட்டுப்படாமல் அவனுக்கு மாறு செய்கிறீர்கள்.

உங்கள் வாழ்க்கையின் முழு நோக்கமும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வணங்குவதாகும், ஆனால் நீங்கள் உங்களை படைத்தைவனுக்கு கீழ்ப்படியாமல் இருக்கிறீர்கள்.

இவர்களுக்குப் பின்னர், (வழிகெட்ட) தீய பின்தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை (த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே, அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள். (ஆயினும்,) அவர்களில் எவர் (பச்சாதாபப்பட்டு) தவ்பாச் செய்து விசுவாசமுங் கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களோ அவர்களைத்தவிர, அத்தகையோர் சுவனத்தில் பிரவேசிப்பார்கள், இன்னும் அவர்கள் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள் 19:59,60

“உங்களை ஸகர் எனும் நரகத்தில் புகுத்தியது எது?” அ(தற்க)வர்கள், “தொழக்கூடியவர்களில் (உள்ளவர்களாக) நாங்கள் இருக்கவில்லை” என்று கூறுவார்கள். 74:42-43

நீங்கள் நன்றி மறந்தவர்களாக இருக்கிறீர்கள்

அவனுடன் இந்த நெருங்கிய உறவை ஏற்படுத்த உங்கள் படைப்பாளனின் அழைப்பை மறுப்பது நன்றி கெட்டதாகும்.

தொழுகையை கைவிடுதல் (தொடர்ச்சி)

அல்லாஹ் உன்னை படைத்து உனக்கு அனைத்தையும் கொடுத்தான்.

(நபியே!) நீர் கூறுவீராக, (ரஹ்மானாகிய) அவன் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் ஆக்கினான், (இத்தகு பேரருட்களைச் செய்த அவனுக்கு) நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள். ”67:23

நீண்ட நேரம் நின்று கொண்டு தொழுவுவதால் நபிகளாரின் பாதங்கள் வீங்கிவிடும். இதைப் பற்றிக் கேட்டபோது, “நான் என் இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று பதிலளித்தார்கள்.

நீங்கள் சோம்பேறியாக இருக்கிறீர்கள்

வானங்களையும் பூமியையும் படைத்த உங்கள் படைப்பாளனுக்கு நியாயத்தீர்ப்பு நாளில் (தொழுகையை விட்டதற்காக) என்ன காரணம் கூறுவீர்கள்? ஒரு நாளில் 24 மணிநேரம் உங்களுக்கு அருளியவன், ஆனால் நீங்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை மட்டும் தொழுவும் என்றே கட்டளையிட்டான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமையில் ஒரு அடியான், தன்னுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? அவனுடைய கல்வியை கொண்டு என்ன செய்தான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய உடலை எவ்வழியில் பயன்படுத்தினான்? ஆகிய கேள்விகளுக்கு அவன் பதிலளிக்காமல் அவனுடைய பாதங்கள் நகராது.

நீங்கள் கைசேதப்படுவீர்கள்

அல்லாஹ் கூறுகிறான்,

மேலும், “எவர் என்னுடைய நல்லுபதேசத்தைப் புறக்கணிக்கின்றாரோ, நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கிறது, மேலும், மறுமைநாளில் நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம். (அதுசமயம்) அவன் “என் இரட்சகனே! ஏன் என்னை குருடனாக நீ எழுப்பினாய்? நான் திட்டமாக (உலகத்தில்) பார்வை உள்ளவனாக இருந்தேனே” என்று கேட்பான். (அதற்கு) “அவ்வாறே! நம் வசனங்கள் உன்னிடம் வந்தன, நீ அவைகளை மறந்து விட்டாய், (நீ மறந்த) அவ்வாறே இன்றையத்தினம் நீயும் (நம் அருளிலிருந்து) மறக்கப்படுகிறாய்” என்று (அல்லாஹ்) கூறுவான். 20: 124-126

(அல்லாஹ்வுடைய கட்டளைகளை மறுத்தால்) நீங்கள் உங்களுக்கு தான் தீங்கு செய்கிறீர்கள்

அல்லாஹ்வுக்கு உங்களது தொழுகையோ! அல்லது வேறு ஏதும் தேவையில்லை - அனைத்து மகிமையும் அவனுக்கே சொந்தம். அவனுடைய கருணையின் தேவை உங்களுக்கு தான் உள்ளது.

நிச்சயமாக, நீர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! (என்று கூறினோம்) இன்னும், எவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் தம(துநன்மை)க்குத்தான், மேலும், எவர் (அவனை) நிராகரிக்கின்றாரோ_(அவர் தனக்கே தீங்கைத் தேடிகொள்கிறார். ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன், புகழப்படுபவன். 31:12

நீங்கள் நிராகரிப்பை சுமந்து கொண்டிருக்கிறீர்கள்

பல இஸ்லாமிய அறிஞர்கள் பின்வரும் ஹதீஸை மேற்கோள் காட்டி நீங்கள் தொழுகையை (காரணமில்லாமல் வேண்டுமென்றே) விட்டால், காஃபிர் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நமக்கும், (இறை மறுப்பாளர்களாகிய) அவர்களுக்கும் உள்ள வேறுபாடு தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார்.

மேலும், நபித் தோழர்கள் (அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்ளட்டும்!) தொழுகையை விடுவதை தவிர! வேறு எந்த ஒரு செயலையும் கைவிடுவதை நிராகரிப்பாக கருதவில்லை. (அதாவது பிற நற்காரியங்களை விட்டு விடுவதை விட தொழுகையை விடுவது நிராகரிப்பாகும். என்று நபித்தோழர்கள் நம்பி வந்தனர்)

(தொழுகையை விடுவதற்கு) பொதுவான சாக்குகள்

ஒருவர் "நேரமில்லை" (வேலை, படிப்பு, வியாபாரம் மற்றும் இன்ன பிற வேலைகளால் தொழுகையை விடுவது) தொழுகைக்கு முன்னுரிமை கொடுக்காமல் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாகும். நீங்கள் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், அல்லாஹ் உங்கள் நேரத்தில் (பரக்கத் எனும்) அபிவிருத்தியளித்து, உங்களை மேலும் பயனுள்ளவராகவும், திறமையானவராகவும், இம்மையிலும் மறுமையில் வெற்றியைத் தந்தருள் புரிவான்.

"என் உள்ளம் தூய்மையானது" என்றால்: தூய்மையான உள்ளத்தை அல்லாஹ் தீர்மானிப்பதற்கு, நீங்கள் தொழு வேண்டும் என விரும்புகிறான். உங்களது செயல்கள் தான் உங்கள் உள்ளத்தின் நிலையை காட்டும். தொழுகையை விடாமல் தொடர்ந்து நிறைவேற்றிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை காட்டிலும் தூய்மையான உள்ளம்கொண்டவர் வேறு எவரும் இருக்க முடியாது!

உங்கள் தூக்கத்தை உளத்தூய்மையுடன் ஸுன்னாஹ்வின் படி அமைத்துக் கொள்ளாவிட்டால்! அலாரம் உங்களை பல முறை எழுப்பினாலும்! அதில் எந்த பலனும் இருக்காது.

"என் குடும்பம்/மனைவி/பெற்றோர்/நண்பர்கள் எனக்கு (மார்க்க கடமையை நிறைவேற்றுவதற்கு) தடையாக உள்ளனர்" என்றால்: நபி (ஸல்) கூறினார்கள்: "அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்தில் யாருக்கும் கீழ்ப்படியக்கூடாது."நீங்கள் தனியாக நீதி நாள் அன்று (அல்லாஹ்விடத்தில்) விசாரிக்கப்படுவீர்கள். அதனால், மற்றவர்களால் குறுக்கீடு செய்யப்படுவதை நீங்கள் காரணமாகக் கூற முடியாது.

நான் அதிகமாக பாவம் செய்கிறேன்:

காலப்போக்கில், உங்கள் தொழுகைகள் இந்த பாவங்களைச் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்கும் – தொழுகையைப் பூர்த்தி செய்யுங்கள்! நீங்கள் தொழுகாததால் பாவம் செய்கிறீர்கள்.

"இஷா மற்றும் ஃபஜ்ர் தொழுகையின் சிறப்பை அவர்கள் அறிந்திருந்தால், அவர்கள் தவழ்ந்து சென்றாவது பள்ளிக்கு சென்று தொழுகையை நிறைவேற்றுவார்கள்." என்ற இந்த ஹதீஸைச் சிந்தித்துப் பாருங்கள்.

அந்த கடினமான (நியாயத்தீர்ப்பு) நாளில் உங்கள் இறைவனை நீங்கள் சந்திக்கும் போது தொழுகையை விட்டதற்கு உங்களிடம் என்ன காரணம் இருக்கிறது?

Similar Downloads

No related download found!