இஸ்லாம் கேள்வி &பதில்

3.32 MB 33 1 Files
albyan
or download free
[free_download_btn]

Description

இஸ்லாம் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.

இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம்கள் என்பவர்கள் யார்?

இஸ்லாம் என்பது எளிமையான மற்றும் முழுமையான வாழ்க்கை முறையாகும். இது மனிதர்களை இறைவனுடன் நல்ல உறவை ஏற்படுத்த கற்றுத்தருகிறது. நம் மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்க நன்மையான செயல்கள் செய்ய வேண்டும். அந்த செயல்கள் இறைவனால் அருளப்பெற்றவையாகவும், நமக்கும் மற்றவர்களுக்கும் பயன் தரக்கூடியவையாகவும் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

இஸ்லாத்தின் செய்தி மிக எளிமையானது: ஓரிறைவனை நம்பிக்கை கொள்வது, அவனை மட்டும் வழிபடுவது, இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களை இறைத்தூதராக ஏற்பது. “இஸ்லாம்” என்ற வார்த்தை இறைவனிடம் சரணடைதல் என்று பொருள். இஸ்லாமைப் பின்பற்றுபவர்களை “முஸ்லிம்கள்” என்று அழைக்கிறார்கள், மற்றும் அவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர் ஆயினும் சரி எந்த பின்புலத்தை சேர்ந்தவர் ஆயினும் சரி.

வாழ்க்கையின் நோக்கம் என்ன?

இறைவன் மனிதனை காரணமில்லாமல் படைக்கவில்லை. அவன் நம்மை உயர்ந்த நோக்கத்திற்காகவே படைத்தான் – அதாவது ஒரே இறைவனை நம்பிக்கை கொண்டு, அவனை மட்டுமே வழிபட வேண்டும். இதை கடைப்பிடித்து வாழ்ந்தால், நம்முடைய வாழ்க்கை சரியான வழியில் சென்று, இந்த உலகத்திலும் மறுமை வாழ்விலும் நன்மையும் வெற்றியும் கிடைக்கும்.

நம்முடைய நம்பிக்கை உண்மையா என்பதை நிரூபிக்க, இறைவனின் அத்தாட்சிகளை நம்முடைய அறிவை கொண்டு ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும். இறைவனின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப வாழ்ந்தால் வாழ்க்கை நிம்மதியாய் அமையும்.

அல்லாஹ்வுடைய நுட்பமான ஞானத்தின் அடிப்படையில் அவன் மனிதனுக்கு சுதந்திரமான ஒரு வாழ்வை கொடுத்திருக்கிறான் அவனுடைய பாதையை யார் பின்பற்றுகிறார் என்பதை சோதிப்பதற்காக!

அல்லாஹ் யார்?

அல்லாஹ் என்பது ஒரே உண்மையான இறைவனின் தனிப்பட்ட பெயர். அல்லாஹ்விற்கு இணை துணை பெற்றோர் குழந்தைகள் என்று யாரும் கிடையாது, அல்லாஹ்வின் அனைத்து குணங்களும் நிறைவானவை, உதாரணமாக: அவன் படைப்புகளை படைக்கக்கூடியவன், கருணையுள்ளவன், ஆற்றலுள்ளவன், நீதமிக்கவன், அறிவுள்ளவன் மற்றும் அனைத்தையும் அறிந்தவன்

மனிதர்களில் யாரும் அல்லாஹ்வின் ஆட்சியையோ அல்லது அவனது குணங்களையோ பகிர்ந்து கொள்ள முடியாது. எனவே, அவன் மட்டுமே நேரடியாகவும் தனித்துவமாகவும் வழிபடுவதற்கு தகுதியானவன்.

முஹம்மது யார்?

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் நீண்ட தூதர்களின் பட்டியலில் இறுதித்தூதர் ஆவார் அவர் சிறந்த முன்மாதிரி தந்தையாக, கணவராக, ஆசிரியராக, தலைவராக, நீதிபதியாக, உதாரணப் புருஷராக இருக்கிறார். அவர் பெரிய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்தாலும் பிற நபிகள் அந்த சமூகத்து மக்களால் வணங்கப்பட்டது போன்று, முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை வணங்க மாட்டார்கள்.

ஏன் அல்லாஹ்வை நம்ப வேண்டும்?

அல்லாஹ்வை நம்ப வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றனர் பகுத்தறிவின் அடிப்படையில் சில காரணங்கள் இதோ

பிரபஞ்சத்தின் துவக்கம் – இறைவனை நம்புவதற்கான காரணங்களில் ஒன்று, பிரபஞ்சத்தின் தோற்றத்தை பற்றி ஆராய்வதிலிருந்து தோன்றுகிறது. பிரபஞ்சம் எங்கே இருந்து தோன்றியது? நவீன அறிவியலின் படி பிரபஞ்சத்திற்கு துவக்கம் உண்டு அதுவே தானாக உருவாகியிருக்க முடியாது. இதனை ஒருவன் படைத்திருக்க வேண்டும். பிரபஞ்சத்தின் படைப்பாளன் (அல்லாஹ்) நித்தியமானவன்; அவன் துவக்கமும் முடிவும் இல்லாதவன்.

பிரபஞ்சத்தின் ஏற்பாடு : அல்லாஹ்வை நம்புவதற்கு கீழ்வரும் விஷயங்களை கவனத்தில் வைத்து பிரபஞ்சத்தின் துல்லியமான ஏற்பாட்டை பற்றி சிந்திக்க வேண்டும்

முறைப்படுத்தப்பட்ட ஒவ்வொன்றுக்கு பின் ஓர் அறிவாற்றல் இருப்பதை சுட்டிக் காட்டுகிறது

சூரிய குடும்பம் ஒரு நுணுக்கமான கட்டமைப்பிற்கு உட்பட்டு, முறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

எனவே, நமது பிரபஞ்சத்தில் உள்ள ஒழுங்கு, படைப்பாளனின் இருப்பையும் அவனது மிகுந்த ஞானத்தையும் குறிக்கிறது.

குர்ஆன் என்றால் என்ன?

.குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகளும் அவனது இறுதி வேதம் ஆகும்

திறந்த மனம் படைத்தவர்களுக்கு, குர்ஆன், அல்லாஹ் இருக்கிறான். என்பதற்கு வலுவான ஆதாரங்களை எடுத்து வைக்கிறது, குர்ஆன் சொற்றொடரில் மொழி வளத்திலும் ஞானத்திலும் ஈடு இணையில்லாதது. அது அல்லாஹ்வின் வார்த்தைகளாகும். மாறாமல், அப்படியே முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் மூலமாக அனுப்பபட்டதாகும். இது தௌராத் இஞ்சில் போன்ற முந்திய வேதங்கள் அனைத்தையும் உண்மைப் படுத்தக்கூடிய இறுதி வேதமாக இருக்கிறது. இஸ்லாமிய கல்விக்கான பிரத்தியேக ஆவணமாகும். இந்த குர்ஆன் மனிதர்களுக்கு தேவைப்படும் அனைத்து தீர்வுகளையும் வழங்கக் கூடியதாக இருக்கிறது முக்கியமாக வாழ்வின் நோக்கம், இறைக்கொள்கை, அல்லாஹ்வுக்கு பிடித்த செயல், பிடிக்காத செயல் நபிகளின் வரலாறு அதன் படிப்பினைகள் இன்னும் குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் மக்கள் அறியாத அறிவியல் மற்றும் வரலாற்று உண்மைகளை 1400 வருடங்களுக்கு முன்பதாகவே கூறி இருக்கிறது. இவைகள் எல்லாம் குர்ஆன் அல்லாஹ்வினுடைய வார்த்தைகள் என்பதற்கு ஆதாரமாக அமைகின்றன

இஸ்லாத்தின் முக்கிய (தூண்கள்) வழிபாடுகள் என்ன?

முதல் தூண்: நம்பிக்கைக்கு சாட்சி பகர்வது: வணங்குவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை மேலும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனது தூதராக இருக்கின்றார்கள் என்று திட்டவட்டமாக சாட்சி பகர்வது

இரண்டாவது தூண்: ஐவேளைத் தொழுகையை நிலைநாட்டுதல் அதாவது அதிகாலை, பகல், பிற்பகல், சூரியன் அஸ்தமனம் ஆன பின் (மாலை), இரவு ஆகிய ஒவ்வொரு நேரத்திலையும் ஒரு தடவை நிர்ணயிக்கப்பட்ட அளவு தொழுவது

மூன்றாவது தூண்: வரையறுக்கப்பட்ட தர்மம், இது ஏழை எளியவர்களுக்கு கொடுக்கப்படும் தர்மமாகும் தேவைக்கு அதிகமாக சேமிப்பாக பணக்காரர்களின் செல்வத்தில் இருந்து ஆண்டுதோறும் எடுக்கப்படும் மிக சிறிய பகுதியான 2.5%. இது அல்லாமல் அசையும், அசையா சொத்துக்களில் இருந்து சிறிதளவு எடுக்கப்படும். அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்டு வசதி இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

நான்காவது தூண்: ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது, அதாவது அரபி மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமளான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் அதிகாலையிலிருந்து சூரியன் அஸ்தமனமாகும் வரையில் சாதாரணமாக அவர்களுக்கு ஆகுமாக்கப்பட்ட உணவு, பானம் மற்றும் இல்லற வாழ்க்கை அனைத்தையும் தவிர்ந்து அல்லாஹ்வை வணங்கும் நன்மையான காரியங்களில் ஈடுபடுவதாகும். இதன் மூலமாக ஒருவர் இறையச்சம் பெறுவார் மேலும் ஏழைகளின் மீது அக்கரை கொள்வார்

ஐந்தாவது தூண்: எல்லா விதத்திலும் தகுதி பெற்ற ஒரு முஸ்லிம் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது மக்கமா நகருக்கு மேற்கொள்ள வேண்டிய ஹஜ் பயணமாகும். தொழுகை பிரார்த்தனை தர்மம் பயணம் என்று பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பணிவான ஆன்மீக அனுபவம் இது.

இயேசு (ஈஸா) மற்றும் பிற இறைத்தூதர்களை குறித்து முஸ்லிம்கள் என்ன நம்புகிறார்கள்?

அல்லாஹ்வால் ஆயிரக்கணக்கான இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர், குறைந்தபட்சம் ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒரு நபி, அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள், அவனுக்கு யாரையும் இணையாக்காதீர்கள். என்ற செய்தியுடன் அனுப்பட்டுள்ளார்கள். இந்த இறைத்தூதர்களில் ஆதம், நூஹ், யூசுஃப், இப்ராஹிம், யாகூப், இஸ்ஹாக், மூஸா, ஈஸா மற்றும் முஹம்மது (அனைவருக்கும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்) ஆகியோர் அடங்குவர்.

ஈஸா அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க தந்தையின்றி பிறந்தார் மேலும் அல்லாஹ்வினுடைய அனுமதியுடன் பல்வேறு அசாதாரணமான நிகழ்வுகளை நிகழ்த்தி காண்பித்தார்

ஈஸா அவர்கள் அல்லாஹ் அனுப்பிய இறைத்தூதர்களில் மிக முக்கியமானவர் ஆவார்

ஈஸா அவர்கள் கடவுளோ, கடவுளின் பகுதியோ, கடவுளின் குமாரரோ, மூன்றில் ஒன்றோ கிடையாது. இவை அனைத்தும் இஸ்லாத்தின் இறை கொள்கைக்கு முற்றிலும் மாற்றமானது கீழ் கூறப்பட்டது கவனத்தில் கொள்க:

கிறிஸ்தவத்தின் போதனையில் ஈஸா அவர்கள் வேறு இறைவன் வேறு என்பதை தெளிவுபடுத்தும் பல்வேறு உதாரணங்கள் உள்ளன. உதாரணமாக: ஈஸா அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அவரே கடவுளாக இருந்தால் வேறு ஒருவரிடம் பிரார்த்தனை செய்வதின் அவசியம் என்ன?

· "தேவ குமாரன்" என்ற சொல் ஆரம்பகால விவிலிய மொழிகளில் " நல்ல மனிதர்" என்பதைக் குறிக்க அடையாளமாக பல மக்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது - இயேசுவுக்கு மட்டும் அல்ல. இந்த வார்த்தை எந்த கோணத்தில் பயன்படுத்தப்படுகிறது என்ற தெளிவில்லாமல் வார்த்தைகளுக்கு அப்படியே அர்த்தம் கொள்ளும் பொழுது சிக்கல் ஏற்படுகிறது.

· முஸ்லிம்கள் ஈஸா நபியையும் (மற்றும் மற்ற அனைத்து தீநபிமார்களையும்) நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள் என்றாலும், அவர்கள் அவரை வணங்குவதில்லை அல்லது அவருக்கு இறைவனுக்குண்டான பண்புகளை இட்டுக்கட்டுவதில்லை, ஏனெனில் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சொந்தமான பண்புகளை யாருக்கும் உரிதாக்கி விட முடியாது. அவனது பண்பு தனித்துவமானது தான்.

எல்லா மதங்களும் ஒன்றா?

எல்லாம் மதங்களும் ஒரே மாதிரியான நல் ஒழுக்கங்களையும் மனிதநேயத்தையும் சொன்னாலும் இஸ்லாம் பிற மதங்களைப் போன்று இல்லாமல் அதிகபட்ச கவனத்துடன் அல்லாஹ்வின் மகத்துவத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் ஏகத்துவப்படுத்துகிறது. அல்லாஹ் தனது செயல்கள் சொற்கள் பெயர்கள் பண்புகள் ஆகிய அனைத்து விதத்திலும் தனித்துவம் வாய்ந்தவன் அவன் படைத்த படைப்புகள் எல்லாவற்றையும் விட்டு முற்றிலும் வேறுபட்டவன் என்று இஸ்லாம் போதிக்கிறது. அவனுக்கு மட்டுமே எல்லா புகழ்ச்சியும் வணக்க வழிபாடும் உரித்தாகும். இஸ்லாம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய எளிமையான தெளிவான மார்க்கமாகும், அதற்கென்று பாதுகாக்கப்பட்ட வேதம் இருக்கிறது எந்த ஒரு நபியையும் மறுக்கவில்லை மாறாக எல்லோரும் ஒரே செய்தியை கொண்டு வந்தனர் என்கிறது.

இறந்த பிறகு என்ன நடக்கிறது?

மரணம் என்பது தற்காலிக உலக வாழ்வில் இருந்து நிரந்தர மறுமை வாழ்வுக்கு செல்லுவதற்கான ஒரு பாதை ஆகும்.

ஒவ்வொருவரும் இறந்த பின்பு உயிர்ப்பிக்கப்பட்டு அவர் செய்த நல்லது கெட்டதற்கு பொறுப்பாக்கபடுவார். அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு அடிபணிந்து நடந்திருந்தால் அல்லாஹ்வின் கருணையினால் அவர்கள் சொர்க்கம் புகுவார்கள். நிராகரிப்பை தேர்ந்தெடுத்து இருந்தால் நரகம் அவர்களுக்கு காத்திருக்கிறது.

நல்லவர்களுக்கு நன்மையும் தீயவர்களுக்கு தண்டனையும் கொடுக்கப்படும் மறுமை வாழ்க்கை இல்லாவிட்டால் அல்லாஹ்வின் பரிபூரணமான நீதிக்கு இழுக்காகிவிடும். மேலும் வாழ்க்கை அர்த்தமற்றதாக ஆகி விடும்.

இஸ்லாம் பெண்களை எப்படி பார்க்கிறது?

இஸ்லாத்தில் அல்லாஹ்விடத்தில் பொறுப்பிலும் நன்மை தீமைகள் வழங்கப்படுவதிலும் ஆண்களும் பெண்களும் சமமே. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இயற்கையில் உள்ள வேறுபாட்டின் காரணமாக அல்லாஹ் அவரவருக்கென்று குறிப்பான பொறுப்புக்களை விதித்துள்ளான். பெண்கள் மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு எதிரான எந்த ஒரு அடக்குமுறையும் அனுமதிக்கப்படுவதில்லை.

இஸ்லாத்தில் மூல பாவம் என்ற (பாவத்தில் அடிப்படையில் மக்கள் பிறக்கின்றனர் எனும் தத்துவம்) கருத்து உள்ளதா?

மூல பாவம் என்பது இஸ்லாத்தில் கிடையாது. அல்லாஹ் நீதியாளன் ஆகயினால் யாரையும் தான் செய்யாத குற்றத்திற்காக பொறுப்பாக்க மாட்டான்

ஜிஹாத் என்றால் என்ன?

ஜிஹாத் என்றால் மொழி ரீதியாக முயற்சி செய்தல் அல்லது அர்ப்பணித்தல் என்று அர்த்தம். ஒருவர் தனது மார்க்கத்திற்காக வேண்டி அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யும் ஒவ்வொரு முயற்சியும் தியாகமும் ஜிஹாத் என்று கூறலாம். ஆனால் பெரும்பாலும் ஜிஹாத் என்ற வார்த்தைக்கு ராணுவ நடவடிக்கையே பொதுவாக அறியப்பட்டதாக இருக்கிறது. இந்த ராணுவ நடவடிக்கை சமூக நலன் கருதியும் அடக்கு முறையை பரவாமல் தடுப்பதற்கும் நீதத்தை நிலைநாட்டுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படும்.

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா?

போரில் அப்பாவி மக்களை கொல்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒரு செயலாகும். இஸ்லாத்தைப் பொருத்த வரையில் செடி கொடிகள் மற்றும் விலங்கினங்களைக் கூட தேவை இல்லாமல் துன்புறுத்தவோ அழிக்கவோ கூடாது. அப்பாவி மக்களை சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் போர் விதிமுறைகளில் ஒன்றாகும். அதே சமயத்தில் உரிமைக்காக போராடுவதையும் தீவிரவாதத்தையும் வேறுபடுத்தி பார்க்க கடமைப்பட்டுள்ளோம்

ஹலால் உணவு என்றால் என்ன?

ஹலால் என்றால் அனுமதிக்கப்பட்டது என்று அர்த்தம். அல்லாஹ்வினால் முஸ்லிம்கள் உட்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்ட உணவுகளே ஹலாலான உணவு என்று கூறப்படுகிறது. பொதுவாக பன்றியின் இறைச்சி மற்றும் மதுவை தவிர்த்து பெரும்பான்மையான உணவுப் பொருட்கள் ஹலால் ஆனதே. இறைச்சி ஹலாலாக ஆகுவதற்கு அந்தப் பிராணிக்கு குறைந்த வலியுடன் அல்லாஹ்வின் பெயர் கொண்டு அறுக்கப்பட வேண்டும்.

யார் முஸ்லிம் ஆகலாம்?

மனிதர்கள் அனைவருக்கும் இஸ்லாத்தை தழுவுவதற்கான கதவை அல்லாஹ் திறந்தே வைத்திருக்கின்றான். ஒருவருடைய கடந்தகால அல்லது நிகழ்கால நிலைமை எதுவாக இருப்பினும் சரி. எவராயினும் எப்போது வேண்டுமென்றாலும் இஸ்லாத்தை ஏற்றதற்கு சாட்சியாக கீழ்வரும் வார்த்தைகளை உள்ளதாலும் நாவாலும் மொழிவதன் மூலமாக ஒருவர் முஸ்லிம் ஆகி விடலாம்:

வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அல்லாஹ்வின் அடிமையாகவும் தூதராகவும் இருக்கின்றார்கள் என்று நான் சாட்சி கூறுகின்றேன்.

முஸ்லிமாக ஆகுவது என்றால் படைத்தவனை அறிந்து அவனுக்கு கட்டுப்பட்டு அதன் மூலமாக அவனுடன் நெருக்கத்தை அதிகப்படுத்துவதாகும். ஒருவருடைய உலக வாழ்க்கை மற்றும் மறுமை வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக தன்னிறைவானதாக ஆக்குகிறது. இன்னும் வாழ்வின் நோக்கத்தை உணர்ந்து செயல்பட உதவுகிறது.

Similar Downloads

No related download found!