இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்கள்

3.42 MB 130 1 Files
albyan
or download free
[free_download_btn]

Description

இஸ்லாம் பற்றி உங்களுக்கு அடிப்படையில் என்ன தெரியும்?

அறிமுகம்

இஸ்லாம் உலகின் அதிகமான மக்கள் பின்ப்பற்றுகிற மார்க்கமாகும், ஆனால் இது பல்வேறு - அரசியல் காரணங்களுக்காகவும், பொருளாதாரம், ஒருதலைபட்சமான (சர்வதேச) ஊடகங்கள் வாயிலாகவும் இன்னும் சில நச்சுக்புரிதல்க்களைக்கொண்டு மக்களை அச்சுறுத்துகிறார்கள். ஆகயால் ஆகவே மேல் சொன்ன காரணங்களால் இஸ்லாம் மக்கள் மத்தியில் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களை சரியாக புரிந்துகொள்வதற்கான (அறிவு) திறவுகோல், , இஸ்லாமிய அடிப்படை போதனைகள் மற்றும் அதன் உண்மையான ஆதாரங்களின்படி ஒவ்வொரு சூழ்நிலையையும் ஆராய்வது அவசியமாகும்.

தவறான புரிதல் 1 - "முஸ்லிம்கள் நல்ல பண்புகளை முஸ்லிமல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்"

"உங்களில் சிறந்தவர் யாரெனில் சிறந்த ஒழுக்க மாண்புகள் மற்றும் பண்புகளைக் கொண்டவர் தான்." - முஹம்மது நபி (ஸல்)

இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் அதன் விழுமியங்கள் "மேற்கத்திய" கலாச்சாரத்துடன் பொருந்தாது என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த கூற்று உண்மைக்கு புறம்பானது.

முஸ்லிம்கள் உன்னதமான நற்பண்புகளை கடைப்பிடிக்கின்றார்கள்.

உதாரணமாக கீழ்கண்டவைகளில் சில:

நேர்மையாகவும் நீதியாகவும் இருத்தல்

ஒருவரின் வாக்குறுதியயை காப்பாற்றுதல்

(பிற மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து) மத சுதந்திரத்தை அனுமதித்தல்

பெற்றோர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார் மற்றும் முதியவர்களை மதித்தல்

ஏழை, எளியவர்களை அரவணைத்தல் மற்றும் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ளுதல்

அண்டை வீட்டாரை அரவணைத்தல்

பொய், ஏமாற்றுதல், திட்டுதல், கோள்சொல்லுதல் இன்னும் பிறரை பழிவாங்குதல் இவற்றை விட்டு தவிர்து இருத்தல்

முஸ்லிம்கள் சமுதாயத்திற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும் மற்றும் உயர்ந்த ஒழுக்கத்துடனும், சிறந்த நன்னடத்தையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

தவறான புரிதல் 2 - "முஸ்லிம்கள் அல்லாஹ் என்று அழைக்கப்படும் ஒரு இறைவனை வணங்குகிறார்கள்"

நூஹ் (நோவா), இப்ராஹிம் (ஆபிரகாம்), மூஸா (மோசஸ்), ஈஸா (இயேசு) ஆகிய நபிமார்கள் வழிபட்ட அதே இறைவனையே முஸ்லிம்களும் வணங்குகிறார்கள்.

அல்லாஹ் என்பது சர்வவல்லமையுள்ள ஈடு இணையற்ற இறைவனை குறிக்க பயன்படும் சொல்லாகும். மேலும் இது அரபி மொழியில் ஆழ்ந்த பொருள் கொண்டதாகும். ஒரே இறைவனை குறிக்கும். அல்லாஹ் எனும் சொல் அரபு மொழி பேசும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் தங்களின் கடவுளைக் குறிக்கப் பயன்படுத்தும் வார்த்தையாகும்.

இருப்பினும், முஸ்லிம்கள், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒரே இறைவனை (படைப்பாளன்) நம்பினாலும், இறைக்கொள்கை பற்றி அவர்களுக்கு மத்தியில் வேறுபாடு இருக்கிறது.

உதாரணமாக: முஸ்லிம்கள், இறைவன், எந்த இணை துணையையும் தனது கூட்டாளியாக எடுத்துக்கொள்பவன் அல்ல, என்ற கொள்கையை உடையவர்கள். முக்கடவுள் கொள்கையை நிராகரித்து எல்லாம் வல்ல ஓரிறைவனுக்கு மட்டுமே பரிபூரணத் தன்மை (படைத்தல், காத்தல், பரிபாலித்தல்) உள்ளது என உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

தவறான புரிதல் 3 – “இஸ்லாம் பயங்கரவாதத்தை அனுமதிக்கிறது”

பொதுவாக ஊடகங்கள் எந்த முஸ்லிம் போராடினாலும் நியாயம், அநியாயம் என்று பொருட்படுத்தாமல் பயங்கரவாதியாகவே சித்தரிக்கின்றன.

போரில், அப்பாவி பொது மக்களை குறிவைப்பது இஸ்லாத்தில் தெளிவாக தடை செய்ப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம்கள் நாட்டு வளங்கள் மற்றும் வன விலங்கினங்களை சேதப்படுத்துவதற்கு அனுமதியில்லை. ஆனால் பயங்கரவாதமும் சட்ட ரீதியான போராட்டமும் வேறுபட்டவை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு அப்பாவியை கொல்வது மிகப்பெரிய குற்றம் என்று அல்குர்ஆன் கூறுகிறது. மேலும், மனித உயிரை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இதன் காரணமாகவே ‘‘எவனொருவன் மற்றோர் ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவே தவிர (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவன் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான்'' ….

5:32.

தவறான புரிதல் 4 – “இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது”

இஸ்லாத்தில், ஆண்களும் பெண்களும் இறைவனுக்கு முன் சமம். இருவரும் சமமான நன்மையைப் பெறுவார்கள் மற்றும் அவர்களின் வழிபாடு, இறையச்சம் இவற்றைப்பொறுத்து இறைவனிடத்தில் வேறுபடுவார்கள்.

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடைவர்தான், 49:13

ஒருவர் பணக்காரனாகவோ ஏழையாகவோ, கறுப்பராகவோ, வெள்ளையராகவோ, ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பதனால் உண்மையான அந்தஸ்த்தை அடைவதில்லை, ஆனால் வணக்க வழிபாடு மற்றும் பேணுதல் மிக்க வாழ்வின் மூலமாகவே உண்மையான அந்தஸ்த்தை அடைகிறார் என்று இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.

இரு பாலினங்களையும் படைத்த அல்லாஹ், அவர்களின் வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு பொறுப்புகளை வழங்கியுள்ளான்.

பெண்களுக்கு சம அந்தஸ்த்து, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தல், கல்வியைத் தேர்ந்தெடுத்தல், விவாகரத்து மற்றும் வாரிசுரிமை போன்ற விஷயத்தில் மிகுந்த கண்ணியமும் மரியாதையும் வழங்கப்படுகின்றன.

மார்க்க அறியாமையின் காரணமாக, சில முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படுகின்றார்கள், மற்றும் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது இஸ்லாத்தின் தவறல்ல, சில நாடுகளில் மக்கள் இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத பண்பாட்டு பழக்கவழக்களை பின்பற்றுகின்றார்கள் அதுவே இதற்கு காரணமாகும்.

தவறான புரிதல் 5 - "குர்ஆன் வரலாறு அல்லது கவிதை சாரந்த புத்தகம்"

குர்ஆன் என்பது அல்லாஹ்வின் நேரடி வார்த்தையாகும். அது முஹம்மது நபிக்கு ஜிப்ரயில் எனும் வானவரால் வழங்கப்பட்டதாகும். இது சத்தியத்தை அறிந்து வாழ்வதற்கான வழிகாட்டுதலை கொண்டுள்ளது. குர்ஆன் முன் சென்ற சமூகங்களின் வரலாறு மற்றும் நபிமார்களின் வாழ்க்கையைப்பற்றி பல நல்ல முன் மாதிரிகளை குறிப்பிடுகிறது. மேலும் அவற்றை கற்றுக்கொண்டு நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு அமைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறது.

மனிதர்களை இறைவன் நோக்கமில்லாமல் படைக்கவில்லை. இந்த உலகில் மனிதர்களின் வாழ்க்கை ஒரு சோதனையாகும். இந்த சோதனை என்பது, மனிதனின் அறிவு, சிந்தனை திறன், போன்றவற்றை பயன்படுத்தி, இறைவனின் அடையாளங்களை அறிவதிலும், உணர்வதிலும் அமைந்துள்ளது. அந்த அடிப்படையில் குர்ஆன் என்பது இறைவனின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகும். அதைப் படித்து, அதன் அர்த்தங்களைத் தெளிவாக புரிந்துகொண்டு, அதன் வழிகாட்டுதலின்படி வாழ்வதே நம் கடமையாகும். இதன் மூலம் நாம் இறைவனின் மீதான நம்பிக்கையை உண்மையாக உணர்ந்து கொள்ள முடியும்.

குர்ஆன் பல அற்புதங்கள் கொண்டவை, எனவே அதன் நம்பகத்தன்மை குறித்து நமக்கு எந்த சந்தேகமும் தேவையில்லை.

குர்ஆன் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள சிறந்த வழி அதை நீங்கள் நன்குனர்ந்து படிப்பதாகும்.

தவறான புரிதல் 6 - "ஹிஜாப் அடக்குமுறையானது"

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது என்பது, நெருங்கிய உறவினரல்லாத ஆண்களின் முன்னிலையில் தங்கள் அங்க அடையாளங்களை வெளிப்படுத்தாத ஆடைகளால் அணிவதைக் குறிக்கிறது. ஆனால் ஹிஜாப் என்பது, வெறும் உடை சார்ந்தது மட்டுமல்ல, பெண்களின் வாழ்வில் உள்ள ஒழுக்கமும் நடத்தையும் உள்ளடக்குகிறது.

ஹிஜாபை பேணுவதில் பல நன்மைகள் இருந்தாலும், முஸ்லிம் பெண்கள் ஹிஜாபை கடைபிடிப்பதற்கு முக்கிய காரணம் அது அல்லாஹ்வின் கட்டளையாகும், மேலும் தன்னுடைய படைப்புக்கு எது சிறந்தது என்பதை அவன் அறிவான்.

ஹிஜாப் பெண்களின் உடல் தோற்றத்தை விட, உள (ஆன்மீக) அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்கு வலிமையளிக்கிறது. இது பெண்களுக்கு ஒழுக்கத்தை பேணிக்கொண்டு தங்களின் அறிவுத்திறன் மூலம் சமூக முன்னேற்றத்தில் பங்களிக்க அனைத்து சுதந்திரத்தையும் வழங்குகிறது.

ஹிஜாப் என்பது (பெண்களுக்கெதிரான) அடக்குமுறையோ! அல்லது ஆதிக்கத்தையோ! குறிப்பது கிடையாது. மாறாக, இது பெண்களை இழிவான பேச்சுகள், (பிறரிடமிருந்து) தேவையற்ற தொந்தரவு மற்றும் அநியாயமான பேதங்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது. எனவே, ஒரு முஸ்லிம் பெண்ணை நீங்கள் காண்கின்றபோது, அவர்கள் தங்கள் உடலின் தோற்றத்தை மூடுகிறார்களே தவிர, தங்களின் அறிவையும் திறமையையும் மூடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தவறான புரிதல் 7 - "அனைத்து முஸ்லிம்களும் அரேபியர்கள்”

உலகில் உள்ள முஸ்லிம்களில் சுமார் 20% மட்டுமே அரேபியர்கள், அதாவது சுமார் 80% முஸ்லிம்கள் அரபு அல்லாதவர்கள். உதாரணமாக: அரபு முஸ்லிம்களை விட இந்திய மற்றும் இந்தோனேசிய முஸ்லிம்கள் அதிகம்.

ஒருவருக்கு இனத்தாலும் அல்லது நிறத்தாலும் ஒருவரை விட மற்றவருக்கு சிறப்பு இல்லை, என்று இஸ்லாம் கற்பிக்கிறது, மற்றும் இஸ்லாம் இனவெறிக்கு முற்றிலும் எதிரானது. இஸ்லாம் கூறுகிற செய்தி அனைத்து மக்களுக்கானது – ஒரே சத்திய இறைவனான அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு அவனை மட்டும் உறுதியாக வழிபட்டால் தான் அனைவருக்கும் அமைதியும் வெற்றியும் கிடைக்கும்.

தவறான புரிதல் 8 - "ஜிஹாத் ஒரு பயங்கரவாதம்"

ஜிஹாதின் பொருள்: ஒருவர் தனது மார்க்கத்திற்காக இறைவன் அனுமதித்த அடிப்படையில் பரிசுத்தமாக போராடுவதும் தியாகம் செய்வதுமாகும். மொழி ரீதியாக இதன் பொருள் "போராடுதல்" என்பதாகும். நல்ல செயல்களைச் செய்ய முயற்சிப்பது, தர்மம் செய்வது, அல்லது ஒரு இஸ்லாமிய இராணுவ நடவடிக்கையில் பங்கேற்பது போன்றவற்றைக் குறிக்கும். ஜிஹாதின் மிகப் பிரபலமான வடிவம் இராணுவ ஜிஹாத் ஆகும், இது சமுதாயத்தின் நலனைக் காக்கவும், அடக்குமுறையை தடுக்கவும், நீதியை நிலைநாட்டவும் அனுமதிக்கப்படுகிறது. இது சூழ்நிலைக்கேற்ப உயிர்களையும் உடைமைகளையும் (தற்காப்பு), பாதுகாப்பதற்காகவும் சில சமயங்களில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு கருதி தாக்குதலுக்காகவும் இருக்கும்.

தவறான புரிதல் 9 - "முஸ்லிம்கள் முஹம்மது நபியை அல்லது சந்திரனை கடவுளாக வணங்குகிறார்கள்"

மற்றொரு தவறான புரிதல் என்னவென்றால், முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை வணங்குகிறார்கள். இது முற்றிலும் பொய்யானது, மேலும் நபி (ஸல்) அவர்களின் உண்மையான கூற்று இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது: “கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் இயேசுவை (ஈஸாவை) அதிகமாகப் புகழ்ந்தது போல் என்னை அதிகமாகப் புகழ்ந்து பேசாதீர்கள். நான் அல்லாஹ்வின் அடிமை, எனவே என்னை ‘அல்லாஹ்வின் அடிமை அல்லது அல்லாஹ்வின் தூதர்’ என்றே குறிப்பிடுங்கள்.

இஸ்லாம், முஸ்லிம்களுக்கு இறைவனின் தீர்க்கதரிசிகள் மற்றும் தூதர்கள் அனைவரையும் மதிக்கக்கற்றுக் கொடுக்கிறது - ஆனால் அவர்களை மதிப்பதும் நேசிப்பதும் அவர்களை வணங்குவதாக அர்த்தமாகாது.

முஸ்லிம்கள், சந்திரனை கடவுளாக வணங்குகின்றார்கள் என்பது முற்றிலும் தவறானது. சந்திரனை வணங்குவது மட்டுமல்ல அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த பொருளையும் வணங்குவது இஸ்லாத்தில் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸஜ்தா (வணக்கம்) செய்யவேண்டாம், நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருந்தால், அவற்றை படைத்தவனாகிய அல்லாஹ்விற்கே ஸஜ்தா (வணக்கம்) செய்யுங்கள். 41:37

இறைவனின் முழுமையான சிறப்பையும், மகத்துவத்தையும், தனித்தன்மையையும் இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறது. அவன் மிக நியாயமானவன் மற்றும் மிக கருணையுள்ளவன். ஒரே இறைவனை மட்டுமே வழிபடுவது இஸ்லாமின் மிக முக்கியமான அடிப்படை நம்பிக்கையாகும்.

தவறான புரிதல் 10 – “இஸ்லாம் கட்டாயத் திருமணங்களை அனுமதிக்கிறது”

உலகின் பெரும்பாலான நாடுகளில் குடும்பத்தினர் மூலம் நிச்சயிக்கப்பட்டு, ஏற்பாடு செய்யும் திருமணங்கள் தான் வழக்கமாக இருக்கிறது. இது முஸ்லிம்கள் மட்டும் செய்வது இல்லை. ஆனால், கட்டாயத் திருமணங்கள் தவறாக இஸ்லாமைச்சேர்ந்தது போல கூறப்படுகிறது, ஆனால் அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை

இஸ்லாத்தில், ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் தங்களின் விருப்பமான துணையைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது விவாகரத்து செய்யவோ! உரிமையுண்டு, மேலும் திருமணத்திற்கு முன் பெண்ணின் மண ஒப்புதல் வழங்கப்படாவிட்டால் திருமணம் செல்லாததாகவே கருதப்படுகிறது.

தவறான புரிதல் 11 – “இஸ்லாம், மக்களை முஸ்லிம்களாக மாற கட்டாயப்படுத்துகிறது"

அல்லாஹ் கூறுகிறான்:

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது.

2:256

முஸ்லிம்கள் இஸ்லாமின் அழகிய செய்தியை மற்றவர்களுக்கு பகிர்வது கடமையாக இருந்தாலும், யாரையும் இஸ்லாமை ஏற்க கட்டாயப்படுத்த முடியாது. இஸ்லாத்தை ஏற்க ஒரு நபர் உண்மையில் மனதார ஒப்புக்கொண்டு இறைவனுக்கு கீழ்ப்படிவதாக இருக்க வேண்டும். அதனால், யாரையும் இஸ்லாமை ஏற்க கட்டாயப்படுத்த முடியாது.

பின்வருவனவற்றைக் கவனியுங்கள்:

இந்தோனேசியாவில் அதிக முஸ்லிம் மக்கள்தொகை உள்ளது, ஆனால் அங்கு இஸ்லாத்தை பரப்புவதற்கு எந்தப் போர்களும் நடத்தப்படவில்லை.

சுமார் 14 மில்லியன் எகிப்திய அரபு கிறிஸ்தவர்கள் அரேபியாவின் மையப்பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இன்று மேற்கத்திய நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் இஸ்லாமும் ஒன்று.

அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதும் நீதியை நிலைநாட்டுவதும் ஜிஹாத் செய்வதற்கு சரியான காரணங்கள் என்றாலும், இஸ்லாத்தை ஏற்கும்படி மக்களை வற்புறுத்துவது ஜிஹாத் செய்வதாக ஆகாது.

முஸ்லிம்கள் ஸ்பெயினை சுமார் 800 வருடங்கள் ஆட்சி செய்தாலும் மக்களை மதம் மாற வற்புறுத்தியதில்லை.

முடிவுரை

இஸ்லாத்தைப் பற்றி தகுதியற்ற ஆதாரங்களிலிருந்து கற்றுக்கொள்வது ஆபத்தானது மற்றும் தவறான புரிதலுக்கு வழிவகுக்கிறது. இது உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்களால் பின்பற்றும் நம்பிக்கையாகும். ஆகவே! இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களாலும் அல்லது தவறான தகவல்களை பரப்புவதாலும் மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது.

மனிதகுலத்துக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கும் இஸ்லாமின் செய்தி, கவனமாக சிந்திக்கவும் ஆராய்ந்து புரிந்துகொள்ளவும் தேவையானதல்லவா?

Similar Downloads

No related download found!