Description
ஒவ்வோர் ஆத்மாவும் (உயிரும்) மரணத்தைச் சுவைக்ககூடியதாகும். 29:57
மரணம் அருகில் இருக்கிறது
நீங்கள் எங்கிருந்தபோதிலும், மரணம் உங்களை அடைந்தே தீரும், மிகப்பலமாகக் கட்டப்பட்ட கோட்டை (கொத்தளங்களில் நீங்கள் இருந்தபோதிலும் சரியே! 04:78
மரணம் என்பது தவிர்க்க முடியாத யதார்த்த உண்மை. கழிய கூடிய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு நிமிடமும் மரணம் நெருங்கி கொண்டு இருக்கிறது. சிஐஏவின் தி வேர்ல்ட் ஃபேக்ட்புக் 2007,யின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஒரு நொடிக்கு இரண்டு பேர் அதாவது ஒரு வருடத்திற்கு 57.9 மில்லியன் மக்கள் மரணிக்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சிக்குரியது. ஒவ்வொரு ஆத்மாவும் வயது, பின்புலம், சமூக அந்தஸ்து அல்லது பேணுதல் ஆகிய எதனடிப்படையிலும் தப்பிக்க இயலாத விதியான மரணத்தை அடைந்தே தீரும். கடந்த காலத்தில் ஆண்டனுபவித்த அரசர்கள், பண முதலைகள், ஜாம்பவான்கள் எங்கே? புகழின் உச்சத்தை அடைந்த அழகான, பிரபலமான, அறிவுஜீவிகளான உயரடுக்கு மக்கள் எங்கே? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
மரணத்தின் யதார்த்த நிலை
மரணம் என்பது பேரழிவு அல்ல, இவ்வுலக வாழ்க்கையிலிருந்து நிரந்தர மறுமை வாழ்க்கைக்கு செல்வதாகும். அது நம்மை வாழ்க்கையின் நோக்கத்தையும், மரணத்திற்குப் பிறகு நமது நிலை என்ன? என்பதையும் சிந்திக்க வைக்க வேண்டும்.
அல்லாஹ், நம்மை, தன்னை மட்டுமே வணங்கும் நோக்கத்திற்காகப் படைத்துள்ளதாகவும், அந்த நோக்கத்தை யார் நிறைவேற்றுவார்கள்? என்பதைப் பரிசோதிக்க இந்த வாழ்க்கையை ஒரு சோதனையாக மாற்றியுள்ளதாகவும் குர்ஆனில் நமக்குத் தெரிவித்திருக்கிறான்:
மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை.51:56
மரணம் மற்றும் வாழ்வின் நோக்கத்தை அல்லாஹ் நமக்குத் தெரிவித்திருக்கிறான்:
உங்களில் எவர் செயலால் மிக்க அழகானவர், என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்திருக்கின்றான். (குர்ஆன் 67:2)
இறுதிச் சடங்குக்கான செலவு மட்டும் மரணத்திற்கான தயாரிப்பு ஆகிவிடாது. மரணத்திற்கான தயாரிப்பு அல்லாஹ்வை மட்டும் தனித்தவனாக வணங்கி, அவனது கட்டளைகளை நிறைவேற்றி, நல்லறங்களை செய்து வாழ்வின் நோக்கத்தை முழுமைப்படுத்துவதாகும். உண்மையில், இஸ்லாத்தில் வழிபாடு என்பது தொழுகை மட்டும் கிடையாது மாறாக, அல்லாஹ் பொருந்திக்கொள்ளக் கூடிய ஒவ்வொரு சொல்லும் செயலும் வழிபாடாகும். ஒருவர் தனது சொல்லுக்கும் செயலுக்கேற்ப கூலிப்பெற்றுகொள்வார்.
மரண வேளை
நம்பிக்கைகொண்டவர்களே! ஒவ்வொரு மனிதனும், நாளைய தினத்திற்காக எதனைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும்.59:18
ஒவ்வொரு நாளும் பல்வேறு காரணங்களினால் மரணிக்கும் நபர்களின் செய்தியை நாம் கேள்விப்படுகிறோம். நாம் விரும்புவதெல்லாம் வன்முறையும் வலியும் இல்ல மரணம். ஆனால் உண்மையில் உயிர் உடலை பிரிந்து விடும் பொது உடலின் வடிவம் உயிரின் வேதனை அல்லது நிம்மதியை பிரதிபளிக்காது. ஒரு உயிர் நிம்மதியாக இருக்கிறதா அல்லது கஷ்டத்தை அனுபவிக்கிறதா என்பதை அதன் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்ற எவ்வளவு நன்றாக உழைத்தார் என்பதே தீர்மானிக்கும். இதற்கும் மரணதிற்கான காரணத்திற்கு எந்த விதமா சம்பந்தமும் இல்லை
ஒவ்வொரு நாளும் பல்வேறு காரணங்களால் மரணிக்கும் நபர்களின் செய்தியை நாம் கேள்விப்படுகிறோம். சாந்தமான மரணம் என்றால், வலியும் சங்கடமும் இல்லாமல் நடந்த மரணம் என்று நாம் கருதலாம். ஆனால், எல்லா சமயங்களிலும் இது உண்மையல்ல. ஒரு நபர் மரணம டையும் போது, அவர்களின் ஆத்மா உடலை விட்டு பிரிகிறது. இந்த நேரத்தில், உடலின் தோற்றம் ஆத்மாவின் நிலையைச் சரியாக பிரதிபலிக்காது. உயிர் பிரியும்போது ஏற்படும் அமைதி அல்லது சங்கடம் என்பது, அந்த நபர் தனது வாழ்க்கையை எவ்வாறு வாழ்ந்தார், மற்றும் இறைவனால் கொடுக்கப்பட்ட வாழ்க்கையின் நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதைப் பொறுத்தே அமையும்.
இதற்கு நேர்மாறாக, இரண்டாவது நபர் தனது பயணத்துக்கான தயாரிப்புகளில் கவனக்குறைவாக இருந்து, ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க மட்டுமே வாழ்க்கையை நடத்துகிறார். மரணம் வந்தவுடன், அவர் பயத்திலும் குழப்பத்திலும் மூழ்குகிறார். தயாரிப்புகள் இல்லாததால், அவர் துன்பகரமான முடிவை சந்திக்க நேரிடுகிறது. அவருடன் கொண்டு வந்த அனைத்து பொருள்களும் பயனற்றவை என்பதை அவர் உணருகிறார். வாழ்க்கையைச் சரியாக வாழாததால், இறுதியில் அவர் சந்திக்கும் நிலை மிகுந்த துயரமிக்கதாகும்.
அத்தகைய கவனக்குறைவான நபரைப் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:
முடிவாக, அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்து விடுமானால் (அவன் தன் இரட்சகனிடம்) “என் இரட்சகனே! என்னை (உலகத்திற்கு)த் திருப்பி அனுப்பிவிடுவாயாக” என்று கூறுவான்.
நிச்சயமாக, அவன் கூறுவது வெறும் வார்த்தையாகும். 23:99,100
நரகத்திற்குள் தள்ளப்பட்ட அந்த மக்களின் பதிலையும் கவனித்துப் பாருங்கள், அவர்களை அங்கு சேர்த்தது எது? என்று விசாரிக்கப்படும்போது:
அ(தற்க)வர்கள், “தொழக்கூடியவர்களாக நாங்கள் இருக்கவில்லை” என்று கூறுவார்கள். “இன்னும் நாங்கள் ஏழைக்கு உணவளிப்பவர்களாகவும் இருக்கவில்லை”
“(வீணானவற்றில்) மூழ்கி இருந்தோம்” மேலும், “கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்குபவர்களாக இருந்தோம்.”
“எங்களுக்கு (மரணம் எனும்) உறுதி வரும்வரை (இவ்வாறு இருந்தோம்” என்றும் கூறுவார்கள்). 74:43 – 47
நமது மரணம் நேரம் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. மற்றும் நாம் அனைவரும் இந்த அறியாத இடத்திற்கு ஒரு நாள் பயணிக்க வேண்டும். மரணத்தை சந்தித்தே தீரவேண்டும்.
தயவுசெய்து "இந்த பயணத்திற்கான தயாரிப்பு நான் செய்திருக்கிறேனா?"என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்
வாழ்க்கையின் நோக்கம்
நாம் உங்களை வீணாகவே படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படவே மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா, என்ன? 23:115
வாழ்க்கை மரணத்தில் முடியும் சோதனைக்கூடமாகும் மரணத்தோடு வாழ்க்கை முடிவடைய போவதில்லை ஆனால் நல்ல செயல்களைச் செய்யும் வாய்ப்பு முடிவுக்கு வரும். மரணத்தின் போது மன்னிப்பு கோருவது பயனளிக்காது. இவ்வுலக வாழ்க்கையில் நமது நம்பிக்கையும் நற்செயல்களும் மட்டும் தான் விதியினை தீர்மானிக்கும். மனிதனின் வாழ்க்கை இரு பகுதிகள் கொண்டவை, தற்காலிகமான இவ்வுலக வாழ்க்கை மற்றும் நிரந்தரமான மறுமை வாழ்க்கை. நமது வாழ்க்கை. இதில் எந்த மனிதன் தற்காலிக இவ்வுலக வாழ்வுக்கு பதிலாக நிரந்தர வாழ்க்கையை தேர்வு செய்வார்?
அல்லாஹ் மனிதகுலத்தைப் படைத்து, நமக்கு ஒரு விஷயத்தை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும், சரி, தவறுகளைப் பகுத்தறியும் திறனையும் வழங்கி, நமது செயல்களுக்கு நம்மைப் பொறுப்பாக்கினான். நல்லவர்களுக்கு வெகுமதியும், கெட்டவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும். மறுமை வாழ்வு என ஒரு நம்பிக்கை இல்லையென்றால், அது அல்லாஹ்வின் முழுமையான நீதிக்கு கேள்விக்குறியாகிவிடும்.
எனவே, ஒவ்வொரு ஆன்மாவும் (உயிரும்) கணக்குக் கொடுக்கப்பட வேண்டிய தீர்ப்பு நாள் இருக்க வேண்டும் என்பது நீதிக்கான முழுமையான சரியான கோரிக்கையாகும்.
(நமக்கு) முற்றிலும் வழிபடும் நம்பிக்கையாளர்களை! (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கி விடுவோமா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இருவரும் சமமென) எவ்வாறு, தீர்ப்பு அளிக்கிறீர்கள்? 68:35,36
தீர்ப்பு நாள்
(நபியே! அவர்களிடம்) கூறுவீராக: ‘‘நீங்கள் வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாகப் பிடித்துக் கொள்ளும். பின்னர், மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் கொண்டு வரப்பட்டு, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். 62:8
ஒவ்வொருவருடைய செயல்களும் மிகவும் துல்லியமாக பதிவு செய்து பாதுகாக்கப்படுகிறது. அல்லாஹ் கூறுகிறான்:
(நபியே,செயல்கள் பதியப்பட்ட) புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து ‘‘எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே! இதென்ன புத்தகம்! (எங்கள் பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் எழுதப்பட்டிருக்கிறதே'' என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீர் காண்பீர். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உமது இறைவன் யாருக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்யமாட்டான். 18:49
நாம் செய்த எல்லா செயல்களும் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கும். அதை காணும்போது நாம் மறந்து போன விஷயங்கள் எல்லாம் நமக்கு நினைவூட்டப்படும். அதை கண்டு நாம் வியந்து விடுவோம்.
அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ், அவர்கள் செய்தவற்றை அறிவிப்பான்; அவர்கள் அவற்றை மறந்துவிட்ட போதிலும், அல்லாஹ் அவற்றைக் கணக்கெடுத்து வைத்திருக்கின்றான். 58:6
நாளை மறுமையில், நமக்கெதிராக! எந்தப் பாவமும் பதிவு செய்யப்பட்டு அல்லாஹ்வின் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டு விடுவோமோ! என்றறிந்து, யோசித்து வெட்கப்பட்டு பாவங்களை விட்டு விலகி இருத்தல் அவசியமாகும்.
அல்லாஹ் உயிர்த்தெழுப்புவான், தீர்ப்பளிப்பான் என்று சந்தேகிப்பவர்களுக்கு அல்லாஹ் இவ்வாறு தெளிவு படுத்துகிறான்:
“உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று (நம்பிக்கையில்லாமல்) அவன் கேட்கிறான். (நபியே!) அதற்கு நீர் கூறுவீராக: “முதல் முறையில் அதைப் படைத்தவன் எவனோ, அவனே அதை உயிர்ப்பிப்பான். அவனோ எல்லா படைப்பினத்தையும் மிக அறிந்தவன் 36:78-79
சொர்க்கமும் நரகமும்
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் மட்டுமே அவனைத் தவிர வேறு யாருமில்லை. என்று நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்பவருக்கு சொர்க்கம் என்ற நற்கூலி உண்டு.
அந்நாளில் நிச்சயமாக, சொர்க்கவாசிகள் சந்தோஷமாக காலம் கழித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களும் அவர்களுடைய மனைவிகளும் நிழல்களின் கீழ் கட்டில்களின் மேல் வெகு உல்லாசமாகச் சாய்ந்து (உட்கார்ந்து) கொண்டிருப்பார்கள். அதில் அவர்களுக்குப் பலவகைக் கனிவர்க்கங்களுடன் அவர்கள் கேட்பதெல்லாம் அவர்களுக்கு கிடைக்கும்.36:55-57
அல்லாஹ் கூறியதாக, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை சொர்க்கத்தில் நான் தயார்ப்படுத்தி வைத்துள்ளேன் ‘
நிராகரிப்பாளர்களுக்கு, மேற் கூறப்பட்ட விஷயத்திற்கு முற்றிலும் மாறாக அவர்களிடம் கூறப்படும்:
"இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நரகம் ஆகும்." இதை நீங்கள் நிராகரித்ததன் காரணமாக இன்றைய தினம் இதில் நீங்கள் நுழைந்து விடுங்கள்'' (என்றும் கூறுவோம்). 36:63,64
நிராகரிப்பாளர்களுக்கு தான் மிகக் கொடிய தண்டனை உள்ளது.
நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே. அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள்.அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள். (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் (மறுமையின்) கேள்வி கணக்கை நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர். அவர்கள் நம் வசனங்களை மிக அலட்சியமாகப் பொய்ப்பித்தார்கள். எனினும், இவை அனைத்தையும் நாம் (நம் குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம்.ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்த மாட்டோம். ஆகவே, (இதைச்) சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறுவோம்). 78:21-30
முடிவுரை
மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது? அவனே! உன்னைப் படைத்தான்; உன்னைக் குறைகள் எதுவுமின்றிச் செம்மைப்படுத்தினான்; உனக்குப் பொருத்தமான உறுப்புகளை அளித்தான். மேலும், தான் நாடிய உருவத்தில் உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான். இவ்வாறிருந்தும், நீங்கள் நியாயத்தீர்ப்பு நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள். 82:6-9
ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள். தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள். 82:13,14
மரணம் தவிர்க்க முடியாதது. நம் வாழ்வின் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதும், நற்செயல்கள் செய்வதும் தீயதை புறக்கணிப்பதுமாகும். நமது விதி தற்போதைய செயல்கள் அடிப்படையில் தான் முடிவாகும். ஆகயால், இவ்வுலக வாழ்க்கையில் வாய்ப்பு கிடைக்கும்போதே, மறுமையின் நிரந்தர சுவனத்துக்கான தயாரிப்பை செய்ய வேண்டும் அல்லது வாழ்க்கையை வீணடித்து விட்டு நிரந்தர நரகத்தில் கைசேதப்பட வேண்டும்.
